தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-10-12 19:29 GMT

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் மாவட்டம், பாண்டகப்பாடியில் இருந்து பெரம்பலூர் செல்லும் தார் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டாமல் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பாண்டகப்பட்டி.

பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்

பெரம்பலூர் மாவட்டம், அத்தியூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் ஒன்று உள்ளது. இந்த அலுகத்திற்கு கிராம நிர்வாக அதிகாரி இல்லாததால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜெகன்,அத்தியூர்.

தகனமேடை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மேலமாத்தூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு யாரேனும் இறந்தால் அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இங்கு தகனமேடை இல்லாததால் மழை காலங்களில் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தகனமேடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பிரபாகரன், மேலமாத்தூர்.

குப்பைகளை முறையாக அள்ள வேண்டும்

பெரம்பலூர் வெங்கடேசபுரம் வடக்கு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் குப்பைகள் முறையாக அள்ளப்படாததால் தற்போது மலை போல் குவிய தொடங்கி உள்ளது. இதனால் தூர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை முறையாக அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

உயர்மின் கோபுரம் சரிசெய்யப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், நல்லறிக்கை கிராமத்தில் உயர்மின் கோபுரம் ஒன்று உள்ளது. இந்த கோபுரத்தில் மின்விளக்குகள் சரியாக எரியவில்லை. இதனால் இந்த வழியாக இரவு நேரங்களில் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சூரியமூர்த்தி, நல்லறிக்கை

Tags:    

மேலும் செய்திகள்