தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெரு விளக்குகள் இன்றி மக்கள் அவதி
பெரம்பலூர் ரோஸ் கார்டன் பகுதியில் சுமார் 500 வீடுகளுக்கு மேல் குடியிருப்பு உள்ளது. மேலும் அதன் கிழக்கு பகுதியில் வேகமாக விரிவாக்கம் செய்யப்பட்டு சித்தர் கோவிலை நெருங்கிவிட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் தெரு விளக்கு இல்லாமல் வயதான பெரியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் இரவு நேரத்தில் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து நகராட்சிக்கு பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சுரேஷ், பெரம்பலூர்.
மின் பற்றாக்குறையால் அவதி
பெரம்பலூர் மாவட்டம், ஆதனூர் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சுமார் 1100-க்கும் மேற்பட்ட வீடுகள் மின்இணைப்பு பெற்றுள்ளன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மின்பற்றாக்குறை ஏற்படுவதால் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்களை இயக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜன், ஆதனூர்.
வாகன நிறுத்தம் வேண்டும்
பெரம்பலூரில் புதிய மற்றும் பஸ் நிலையங்கள் தனித்தனியாக உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள், தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் தங்களது இருசக்கர வாகனங்களில் பெரம்பலூருக்கு வந்து பின்னர் பஸ்களில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். ஆனால் மேற்கண்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்த வாகன நிறுத்தம் (பார்க்கிங்) வசதி இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
மருத்துவ கழிவுகளால் தொற்றுநோய் பரவும் அபாயம்
பெரம்பலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வளாகத்தில் உபயோகத்தப்பட்ட மருந்துவ கழிவுகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடினயாக இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்
தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
பெரம்பலூர்-துறையூர் செல்லும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மாநில நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான ஊர்களில் பஸ் நிறுத்த பகுதிகள் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாததால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிஅடிக்கடி விபத்தில் சிக்கி கொள்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.