தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-15 18:45 GMT

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி கே.கே.நகர் முதல் தெருவில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கே.கே.நகர்.

சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை, விவேகானந்தா நகர் ரெயில்வே பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு பாதியிலே நிறுத்தி விட்டனர். இதனால் அந்த வழியாக அவர தேவைக்கு செல்லும் பொதுமக்கள் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் கால விரையம் ஏற்படுவதுடன், வீணான அலைச்சலும் ஏற்பட்டு வருகிறது. எனவே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மேலகல்கண்டார் கோட்டை.

பஸ் நின்று செல்ல நடவடிக்கை தேவை

திருச்சியில் இருந்து சமயபுரம் வழியாக ஊட்டத்தூர், வாலையூர், திருப்பட்டூர் செல்லும் அரசு பஸ் மேற்கண்ட பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்கிறது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஊட்டத்தூர்.

நிறுத்தப்பட்ட மினிபஸ் இயக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, முத்தரசநல்லூர் கிராமம் கூடலூரில் இருந்து சத்திரம் பஸ் நிலையத்திற்கு அதிகாலை 4.20 மணி அளவில் தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த மினிபஸ் கொரோனா தொற்று காலகட்டத்தி்ல் நிறுத்தப்பட்டது. தற்போது நிலைமை சீராகியும் இந்த மினிபஸ் இயக்கபடாமல் உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார் , கூடலூர்.

குடிநீர் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுப்பட்டியில் பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முறையான குடிநீர் வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பள்ளி கட்டிடத்தை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சேரும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும், பள்ளிக்கு சுற்றுசுவரும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

சுதாகர், கல்லுப்பட்டி. 

Tags:    

மேலும் செய்திகள்