தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;
குவிந்து கிடக்கும் குப்பைகள்
திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை திருமுருகன் நகர் பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், வெட்டவாய்த்தலை.
அரசு பள்ளி சுவற்றில் தண்ணீர் கசிவு
திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், கல்லுப்பட்டி கிராமம் பாறைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஒரு வகுப்பறை உள்பகுதியின் மேல் சுவற்றில் இருந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வகுப்பறைக்குள் விழுந்து வருகிறது. இதனால் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் கசிவை சரிசெய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேதமடைந்த சாலை
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் சோபனபுரத்தில் இருந்து, பச்சைமலைக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் தொடர் மழை காரணமாக சாலையில் ஆங்காங்கே பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி நிற்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதுகுறித்து நடவடிக்ைக எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், டாப்செங்காட்டுப்பட்டி.
குறுகிய பாலத்தில் அறிவிப்பு பலகை வேண்டும்
திருச்சி மாவட்டம், துறையூர்-பெரம்பலூர் மெயின் சாலையில் இருந்து லாடபுரம் செல்லும் சாலையில் குறுகிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் எந்த அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில சிக்கி வருகின்றனர். எனவே அந்த பகுதியில் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய அறிவிப்பு பலகைகளையும் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், துறையூர்.
நாய்கள் தொல்லை
திருச்சி பெரிய மிளபாறையில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் இரவு நேரங்ககளில் பணி முடிந்து மோட்டார் சைக்கிள்களில் செல்வோரையும் பின்னால் துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.