'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-02 16:31 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து பாளையங்கோட்டை பஸ்நிலையம் செல்லும் வழியில் மரம் ஒன்று சாலையின் பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளதால் வாகனங்கள் மரத்தில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக நெல்லையை சேர்ந்த வாசகர் முகம்மது அய்யூப் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மரக்கிளை வெட்டி அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக்கேடு

நெல்லை மேலப்பாளையத்தில் முக்கிய பகுதிகள் அனைத்தும் குப்பைமேடாக காட்சி அளிக்கிறது. மீன் மார்க்கெட் பகுதி, நவாப் பள்ளி மையவாடி பகுதி, தண்டன் பள்ளிவாசல் மையவாடி பின்புறம் அம்மா உணவகம் பகுதிகளில் குப்பைகளாக குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து தூய்மைப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அகமது அலி பாதுஷா, மேலப்பாளையம்.

சிதிலமடைந்த பயணிகள் நிழற்கூடம்

பாளையங்கோட்டை சிவந்திப்பட்டி ஊராட்சியில் அம்பேத்கர் தெருவில் பயணிகள் நிழற்கூட கட்டிடம் சிதிலமடைந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

முத்துவளவன், சிவந்திப்பட்டி.

குடிநீர் குழாய் உடைப்பு

நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழித்தடத்தில் மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி விலக்கில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம், என்.ஜி.ஓ.பி காலனி.

நெல்லை புதிய பஸ்நிலையம் எதிர்புறம் உள்ள ஓட்டலின் முன்பாக (பாலத்தின் அருகில்) குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது. அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முகம்மது ரிபாய், சேவியர் காலனி.

கரடு முரடான சாலை

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி பூந்தோட்டம் முத்தாரம்மன், பத்திரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை உருக்குலைந்து கரடு முரடாக மலைப்பாதை போன்று காணப்படுகிறது. இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் சிரமப்படுகிறாா்கள். எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், காயல்பட்டினம்.

வாறுகாலில் அடைப்பு

புதியம்புத்தூர் வட்டத்தெருவில் மழைக் காலத்தில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் செல்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அதன் அருகே பயனற்ற அடிபம்பு ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.

காட்சிப்பொருளான பெயர் பலகை

சாத்தான்குளம் தாலுகா நடுவக்குறிச்சி கிராமம், திசையன்விளை- உடன்குடி சாலையில் அமைந்துள்ளது. இங்குள்ள நெடுஞ்சாலைத்துறை பெயர் பலகையில் ஊரின் பெயர் அழிந்து வெறுமனே காட்சி பொருளாக உள்ளது. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள், ஊர் பெயர் தெரியாமல் குழப்பம் அடைகிறார்கள். எனவே பெயர் பலகையில் ஊர் பெயரை எழுதுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ஜேசு கோபின், பிரகாசபுரம்.

ரோடு மோசம்

நாசரேத் மெயின் ரோடு குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ராம்நாத் பிரபாகர், குலசேகரநத்தம்.

ஆற்றில் கலக்கும் கழிவுநீர் 

விளாத்திகுளம் வைப்பாற்றில் சாக்கடை கழிவுநீர் கலக்கிறது. இதனால் தண்ணீர் மாசுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவகுமார், விளாத்திகுளம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? 

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் இருந்து பஸ் மூலம் ஆலங்குளம், நெல்லை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகிறார்கள். மேலும் ஆலங்குளம், நெல்லை, பழையபேட்டை பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களிலும் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். காலை நேரத்தில் அதிக அளவில் ஒன் டூ ஒன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் நெல்லை பஸ்கள் வருகின்றன. இதனால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். எனவே காலை நேரத்தில் தென்காசியில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பரந்தாமன், பாவூர்சத்திரம்.

விளம்பர பலகையாக மாறும் கால அட்டவணை

கடையம் ஒன்றியம் முதலியார்பட்டி பஸ்நிறுத்தத்தில் நாள்தோறும் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் நின்று செல்கின்றன. அங்கு பயணிகளுக்கு உதவியாக இருந்த பஸ்கால அட்டவணை தற்போது விளம்பர பலகையாக மாறி வருகிறது. எனவே பஸ்கால அட்டவணையை சீரமைத்துக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முகம்மது காசிம், முதலியார்பட்டி.

ஆபத்தான மின்கம்பம்

செங்கோட்டை மின்வாரிய அலுவலகம் அருகில் மின்கம்பம் வளைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே அதனை உடனடியாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அய்யனார், தேன்பொத்தை.

வாறுகால் மூடி உடைப்பு

கீழப்பாவூர் யூனியன் மேலப்பாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கழிவுநீர் செல்லும் வாறுகால் உள்ளது. அதன் மேற்பகுதியில் உள்ள காங்கிரீட் சிலாப் உடைந்து காணப்படுகிறது. அதன் அருகே பொது சுகாதார வளாகமும் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்்க வேண்டும்.

ராஜ், மேலப்பாவூர்.

அபாயகரமான பள்ளம்

தென்காசி மாவட்டம் புளியரை‌யில் இருந்து கேரள மாநிலம் ஆரியங்காவு செல்லும் எஸ்.வளைவு பாதையில் மிகவும் அபாயகரமான பள்ளங்கள் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே பள்ளங்களில் மண் போட்டு நிரப்புவதை தவிர்த்து விட்டு தரமான தார் சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

செல்வ விக்னேஷ், புளியரை.

Tags:    

மேலும் செய்திகள்