தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு தெரு நாய்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அதிக அளவில் சுற்றித் திரிகிறது. மேலும் வாகனங்களில் செல்வோரை பின்னால் துரத்தில் சென்று கடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
முகமது பாரூக், வி.களத்தூர்.
கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை
பெரம்பலூர் மாவட்டம் , ஆலத்தூர் வட்டம், கூடலூர் ஊராட்சி. இலுப்பைகுடி கிராமத்தில் தெற்கு குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குடியிருப்பு பகுதியின் அருகே அரசுக்கு சொந்தமான நிலத்தில் கருவேல மரங்கள் அதிகளவு வளர்ந்துள்ளது. இதனால் பாம்பு மற்றும் விஷபூச்சுகள் அதிகமாக சுற்றித்திரிகிறது. இதனால் வீடுகளில் உள்ள பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்ணன், இலுப்பைக்குடி.