தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குண்டும், குழியுமான சாலை
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கீழதானியம் பெரிய கம்மாய் வழியாக செல்லும் சாலை குண்டும், குழியுமான உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழத்தானியம்.
சேதமடைந்த குடிநீர் தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே பொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள குளத்து கரையின் மேல் பகுதியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் மாற்றி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், திருவரங்குளம்.
போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி, இடையாத்தூரில் குருந்துடைய அய்யனார் கோவில் உள்ளது. இங்கிருந்து அம்புராணி, மொட்டையாண்டி, வீரண்டான், இடையார் வழியாக அறந்தாங்கி செல்லும் சாலை சிதிலமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆகையால் இந்த சாலையை தார்சாலையாக மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
கருப்பையா, மொட்டையாண்டி, அறந்தாங்கி.
வாகனங்களால் நெரிசல்
புதுக்கோட்டை கீழ 2-ம் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. இதனால் அந்த கடைகளின் முன் பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் பொதுமக்கள் நடப்பதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் இயக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர், காரையூர்,ராஜநாயகம்பட்டி, மழையூர், வாராபூர், புனல்குளம், வல்லதிரகோட்டை ஆகிய 7 இடங்களிலும் 108 ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. இந்த ஆம்புலன்ஸ்கள் கடந்த 6 மாதங்களாக இரவு நேரங்களில் இயங்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் நோயாளிகள் மற்றும் விபத்தில் சிக்குபவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு நேரங்களையும் சேர்த்து ஆம்புலன்ஸ்களை தொடர்சியாக 24 மணிநேரமும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், பரம்பூர்.