'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-24 20:42 GMT

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வீணாகும் குடிநீர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் பழைய பஸ்நிலையம் அருகில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே இதை சரிசெய்ய வேண்டும்.

-நிக்சன், வள்ளியூர்.

மின்விளக்குகள் எரியவில்லை

பாளையங்கோட்டை தியாகராஜநகர் மின்வாரிய அலுவலகம் அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு கடந்த சில மாதங்களாக மின்விளக்குகள் எரியவில்லை. மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முருகன், பாளையங்கோட்டை.

கழிவறை வசதி வேண்டும்

நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம் பகுதியில் தினசரி பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். பஸ் நிறுத்தமும் அமைந்துள்ளது. ஆனால் இந்த பகுதியில் பொது கழிவறை வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொது கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும்.

-பழனிசாமி, நெல்லை.

பச்சையாற்றில் சீமைக்கருவேல மரங்கள்

களக்காடு-பத்மநேரி வடக்கு பச்சையாற்றில் சீமைக்கருவேல மரங்களும், வேலிகாத்தான் செடிகளும் அடர்ந்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன் அதனை அப்புறப்படுத்தி மழைநீர் ஊருக்குள் புகாதவாறு முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-கணேசன், பத்மநேரி.

பூங்கா தினசரி சுத்தப்படுத்தப்படுமா?

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை பஸ்நிலையம் அருகே ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் சிறுவர்-சிறுமிகள் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் நடைபயிற்சி சென்று வருகின்றனர். ஆனால் இந்த பூங்காவை தினசரி சுத்தப்படுத்தாமல் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. எனவே தினசரி குப்பைகளை அள்ளி பூங்காவை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜெயராமகண்ணன், ஆலங்குளம்.

எரியாத உயர்கோபுர மின்விளக்கு

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பஸ்நிறுத்தம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சில மின்விளக்குகள் எரியவில்லை. சில மின்விளக்குகளின் ஒளி குறைவாக உள்ளது. எனவே இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-கணேசன், வசவப்பபுரம்.

மின்கம்பம் வேண்டும்

தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் வழியில் புதுக்கோட்டைக்கு முன்னதாக தட்டாபாறை விலக்கில் பஸ்நிறுத்தம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து பஸ் ஏறிச்செல்கிறார்கள். இரவு நேரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு இருட்டாக உள்ளது. எனவே அந்த பஸ்நிறுத்தம் அருகில் மின்கம்பம் அமைக்க கேட்டுக்கொள்கிறேன்.

-முத்துசெல்வம், தெற்கு சிலுக்கன்பட்டி.

தெரு பெயர் இல்லாத பலகை

உடன்குடி சத்தியமூர்த்தி பஜாரில் பஸ்நிறுத்தம் உள்ளது. இதன் அருகில் வழிகாட்டி பலகை வைத்திருக்கிறார்கள். அந்த வழிகாட்டி பலகையில் தெரு பெயர் அழிந்து விட்டது. மீண்டும் வழிகாட்டி பலகையில் தெரு பெயர் எழுத வேண்டும்.

-சரவணகுமார், உடன்குடி.

வேகத்தடை அமையுமா?

உடன்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ்நிலைய மெயின்ரோடு முதல் செட்டியாபத்து ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வெங்கடாசலபுரம் (பெருமாள்புரம்) ஊரின் முகப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும். இந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால் பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. அதன்பிறகும் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டுகிறேன்.

-சிவகணேஷ், உடன்குடி.

எச்சரிக்கை விளக்கு தேவை

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் நான்கு வழிச்சாலையில் வாகைகுளம் அருகே வர்த்தரெட்டிப்பட்டி செல்லும் நான்கு வழிச்சாலையில் இருந்து அணுகு சாலை பிரியும் இடத்தில் ஊர் பெயர் பலகை இல்லை. மேலும் அந்த இடத்தில் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் ஊர் பெயர் பலகை வைக்க வேண்டும். விபத்து ஏற்படாமல் தடுக்க எச்சரிக்கை விளக்கோ அல்லது ஸ்டிக்கரோ அமைக்க வேண்டும்.

-முத்துக்குமார், வர்த்தரெட்டிப்பட்டி.

கழிவுநீரால் சுகாதாரக்கேடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா தெற்குபுதூர் கிராமம் வடக்கு தெருவில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-சேதுபதி செல்வம், தெற்கு புதூர்.

சாலையை சீரமைக்க வேண்டும்

தென்காசி ெரயில்வே மேம்பாலத்தின் வடக்கு பகுதியில் மங்கம்மா சாலைக்கு செல்லும் வழியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மழை நேரத்தில் ரோட்டில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-நாகராஜ், தென்காசி.

வங்கி ஏ.டி.எம். வசதி தேவை

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரை சுற்றி பல கிராமங்கள் உள்ளன. இந்த ஊரில் வங்கி ஏ.டி.எம். வசதி இல்லை. இதனால் முதியோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் ஏ.டி.எம். சேவைகளுக்கு பிற ஊர்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே எங்கள் ஊரில் ஏ.டி.எம். வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.

வாறுகால் சரிசெய்யப்படுமா?

நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. பாவூர்சத்திரத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் எதிரில் கட்டப்பட்டுள்ள வாறுகாலில் பெரிய பள்ளம் விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் சரி செய்வார்களா?

-மோகன், பாவூர்சத்திரம்.

குண்டும், குழியுமான சாலை

செங்கோட்டையில் இருந்து கொல்லம் செல்லும் மெயின்ேராடு பிரதான சாலை ஆகும். இந்த சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

-கனியமுதன், செங்கோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்