தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-08-24 16:24 GMT

மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது பெய்து வரும் கோடை மழையால் சாலை பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே உடனடியாக சாலையின் இருபுறமும் மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மீன்சுருட்டி

ஒலிப்பெருக்கியை பயன்படுத்த கோரிக்கை

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி வழியாக தினமும் அதிகளவில் கனரக வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முட்டுவாஞ்சேரி சாலையில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் வாகன ஓட்டிகளை எச்சரித்து வந்தனர். தற்போது ஒலிப்பெருக்கி பயன்படுத்தாமல் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் வி.கைகாட்டி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக கனரக வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வி.கைகாட்டி

தரைப்பாலம் சரிசெய்யப்படுமா?

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம், கல்லாத்தூர் ஊராட்சியில் கடந்த ஓராண்டு முன்பு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பணையில் தரைப்பாலம் கட்டப்பட்டது. தற்போது தரைப்பாலம் சேதமடைந்து உள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகள்

அரியலூர் மாவட்டம், வட்டம் கடுகூர் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அயன் ஆத்தூர் காலனி தெருவில் ஆனந்தாவடி, கிளிமங்கலம், கடுகூர் ஆகிய 3 ஊர்களும் சந்திக்கும் இடத்தில் சாலையோரம் ஓரம் குப்பை கொட்டுவதற்காக பள்ளம் தோண்டி சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகின்றன. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், கடுகூர்.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், தத்தனூர் பஞ்சாயத்துக்குட்ட பொட்டக்கொல்லை கிராமத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் இங்குள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் நடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், தத்தனூர்.

Tags:    

மேலும் செய்திகள்