தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2022-08-13 14:56 GMT

விபத்து அபாயம்

நாகர்கோவில் வடசேரியில் இருந்து புத்தேரிக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் சாஸ்தா நகர் பகுதியில் ஓரத்தில் பெரிய பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தில் கடந்த மாதம் அரசு பஸ் கவிழ்ந்து பயணிகள் காயமடைந்தனர். அதைதொடர்ந்து அந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் அதன்பிறகு அந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே கிடப்பில் போடப்பட்ட தடுப்பு சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆல்பிரட், சாஸ்தாநகர்.

சேதமடைந்த சாலை

நாகர்கோவில் கோட்டார் கால்நடை மருத்துவமனையில் இருந்து வடிவீஸ்வரம் பெரிய தெரு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அய்யப்பன், வடிவீஸ்வரம்.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குளச்சல் நகராட்சிக்குட்பட்ட குளச்சல் போலீஸ் நிலையத்திற்கு முன்பு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை (அரசு விருந்தினர் மாளிகை) உள்ளது. இந்த மாளிகை கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழடைந்து காணப்படுகிறது. மேலும் செடி, கொடிகள் வளர்ந்து விச பூச்சுகளின் வசிப்பிடமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு விருந்தினர் மாளிகையை பராமரித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அபுதாஹிர், குளச்சல்.

ஜல்லிகள் பெயர்ந்த சாலை

திருவட்டார் பேரூராட்சிக்குட்பட்ட கொல்வேல்-தெற்றிகோடு சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகளின் நலன்கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-எல்ஜின், கொல்வேல்.

குப்பைகளை அகற்ற வேண்டும்

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட தளவாய்புரம் பகுதியில் சிலர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிறியபுஷ்பம், தளவாய்புரம்.

சாலையை சீரமைக்க வேண்டும்

வெள்ளிச்சந்தை பஞ்சாயத்துக்குட்பட்ட ஆசாரிவிளை பகுதியில் சாலை செல்கிறது. இந்த சலையில் குடிநீர் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பணி முடிந்து பள்ளத்தை சரியாக மூடாமல் விட்டுவிட்டனர். இதனால் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சரியாக மூடி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஷ்ணு, ஆசாரிவிளை.

Tags:    

மேலும் செய்திகள்