தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-27 16:23 GMT

பனை மரத்தில் சாய்ந்து கிடக்கும் மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் இலுப்பூர் சாலையில் செங்கப்பட்டி என்னும் இடத்தில் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் ஒன்று அருகே இருக்கும் பனைமரத்தின் மீது சாய்ந்து கிடக்கிறது. இதனால் அந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகள் முழுவதும் இருட்டாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், செங்கப்பட்டி.


ஆபத்தான மின்மாற்றி

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம் அய்யனார் கோவில் வீதியில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் 2 மின்கம்பத்திலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த மின்மாற்றி கீேழ விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சத்யா, அரிமளம்


குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நாகுடியில் இருந்து சுப்பிரமணியபுரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் அடிக்கடி இந்த பகுதியில் விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், நாகுடி.


நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகரப்பகுதியில் பகல், இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் பயணிகளை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புதுக்கோட்டை

கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் சிதம்பரம் கார்டன் உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது ஊரின் மையப்பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கார்டன் பகுதிக்குள் புகுந்து குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் வீடுகளுக்குள்ளும் கழிவுநீர் புகுந்து வருதால் பொதுமக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பல அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.

Tags:    

மேலும் செய்திகள்