தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-17 18:22 GMT

ஆபத்தான தொகுப்பு வீடுகள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகாவில் நாகுடி ஊராட்சியில் உள்ள களக்குடிதோப்பு மருத்துவர் காலனி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அரசு சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. இவை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுக்கள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த வீடுகள் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனை வந்து ஆய்வு செய்த அதிகாரிகள் இதுவரை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மருத்துவர் காலனி, புதுக்கோட்டை.

உயிர் பலி வாங்க காத்திருக்கும் கட்டிடம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதியில் அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து உள்ளது. இதிலும் சிலர் குடியிருந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம், புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்