தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-09-20 18:53 GMT

சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம்-காகித ஆலை செல்லும் சாலையில் அதியமான் கோட்டை பிரிவு எதிரே சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், அதியமான் கோட்டை

நாய்கள் தொல்லை

கரூர் நகரப்பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை தெருக்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க வருகிறது. இதனால் அவர்கள் பெரிதும் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் முதியவர்களை தெருநாய்கள் கடிக்க வரும்போது அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கரூர்.

வலுவிழந்த பாலம்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முனிநாதபுரத்தில் புகழூர் வாய்க்காலின் குறுக்கே கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி குறுகிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. இந்நிலையில் பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக தற்போது பாலம் வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், முனிநாதபுரம்

குப்பைகளால் சுகாதார சீர்கேடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்க்கால் மேட்டு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இக்குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுப்பிரமணி, மண்மங்கலம்

எலும்புக்கூடான மின்கம்பங்கள்

கரூர் மாவட்டம், தென்னிலை கிழக்கு பஞ்சாயத்தில் உயர் மின் அழுத்த கம்பிகளை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும், பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பங்கள் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜ்குமார், தளிக்கோட்டை

Tags:    

மேலும் செய்திகள்