பொதுமக்கள் குறைகளை தொிவிக்கும் தினத்தந்தி புகாா்பெட்டி பகுதி
தினத்தந்தி புகாா்பெட்டி பகுதி
உடைந்த தரைப்பாலம்
ஈரோடு கிருஷ்ணா தியேட்டரில் இருந்து இந்திரா நகர் செல்லும் சாலையில் தரைப்பாலம் உடைந்து கிடக்கிறது. இதனால் அதில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் செல்லமுடியவில்லை. எனவே உடைந்த பாலத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.
ஆபத்தான பள்ளம்
ஈரோடு மேட்டூர் ரோட்டில் இருந்து முனிசிபல் காலனி செல்லும் வளைவில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வளைவில் வாகனங்கள் திரும்பும்போது பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்குகின்றன. குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி கீழே விழுகிறார்கள். எனவே ஆபத்தான அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமன், ஈரோடு.
தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள்
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூர் அருகே உள்ள மண்கரடு அண்ணா நகர் காலனியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகின்றன. காற்று வீசும்போது வீடுகளின் சுவர்களில் உரசும் நிலையில் உள்ளது. அப்படி உரசும்போது மின்கம்பிகள் அறுந்து விழுந்து மின் விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தாழ்வாக தொங்கும் மின் கம்பிகளை சரிசெய்ய மின் வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ெபாதுமக்கள், மண்கரடு.
போக்குவரத்து நெரிசல்
ஈரோடு கொல்லம்பாளையம் ெரயில்வே பாலத்தில் உள்ள ரோடு மோசமடைந்து காணப்படுகிறது. இதனால் மாலை நேரத்தில் மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகன ஓட்டிகள் சிக்கி திணறி வருகிறார்கள். சில நேரங்களில் கீழே விழுந்து காயமும் அடைகின்றனர். பாலத்தை கடந்து செல்ல அதிக நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே அந்த ரோட்டை சீரமைக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிஷாந்த், கொல்லம்பாளையம்.
பராமரிக்கப்படாத பூங்கா
கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவில் பலர் குப்பைகளை கொட்டிவிட்டு செல்கிறார்கள். இதன்காரணமாக குப்ைபயில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. பூங்காவில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுவதுடன், சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் பூங்காவை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவை பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கோசலை நகர்.
குப்பை அள்ளப்படுமா?
ஈரோடு முனிசிபல் காலனி சத்தியா வீதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. அந்த பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை கொட்டிவிட்டு சென்று உள்ளனர். தினமும் அந்த வீதியில் தூய்மை பணியாளர்கள் வந்து குப்பைகளை சேகரித்து செல்கிறார்கள். ஆனால் வீதியில் கொட்டப்பட்டு உள்ள குப்பைகளை அள்ளாமல் அப்படியே விட்டு விட்டு செல்கிறார்கள். குப்பை கழிவால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பையை அள்ள நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுரேஷ், ஈரோடு.
பாராட்டு
காஞ்சிக்கோவிலில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் வாய்க்கால் பாலம் அருகில் புதிதாக பாலம் கட்டப்பட்டது. எனினும் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் தார் சாலை போடப்படாமல் இருந்தது. இதுபற்றிய செய்தி 'தினத்தந்தி' நாளிதழ் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து அந்த பாலத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், காஞ்சிக்கோவில்.
---------------------