சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன

தினத்தந்தி செய்தி எதிரொலி: சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டன

Update: 2023-09-05 18:45 GMT

கூத்தாநல்லூர்:

வடபாதிமங்கலத்தில் இருந்து, சேந்தங்குடி செல்லும் சாலையில், திட்டச்சேரி பிள்ளையார் கோவிலில் இருந்து சாலை, சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மிகவும் குறுகலான சாலையாக உள்ளது. இந்த சாலை மன்னார்குடி, திருவாரூர், கூத்தாநல்லூர், திருத்துறைப்பூண்டி, கோட்டூர், எட்டுக்குடி, திருநெல்லிக்காவல், விக்ரபாண்டியம், சேந்தங்குடி, வடபாதிமங்கலம் போன்ற முக்கிய ஊர்களை இணைக்கும் வழித்தடம் ஆகும். இந்தநிலையில், வெண்ணாற்றின் கரையோரத்தில் அமைந்துள்ள, திட்டச்சேரி பிள்ளையார் கோவிலில் இருந்து செல்லக்கூடிய குறுகலான சாலையின் இரண்டு பக்கமும் கருவேல மரங்கள் சூழ்ந்து அடர்ந்த காடுகள் போல காணப்பட்டது. இந்த கருவேல மரங்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது. இதனால், வாகனங்கள் எளிதில் சென்று வர முடியாத நிைல ஏற்பட்டது.

எனவே குறுகலான சாலையோரத்தில் 2 பக்கமும் இருந்த கருவேல மரங்களை வெட்டி அகற்றி சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது குறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. இதன் விளைவாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, சாலையோரத்தில் இருந்த கருவேல மரங்களை பொக்லின் எந்திரம் மூலம் வெட்டி அகற்றி சீரமைத்துள்ளனர். சீமைக்கருவேல மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்