சிலம்பம் போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை

சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-11-30 18:45 GMT

தட்டார்மடம்:

தூத்துக்குடி குமாரகிரி சி.கே. டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 5-வது மண்டல அளவில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் பங்கேற்ற சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கத்தை வென்றனர். இந்த சாதனைபடைத்த மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் நோபிள்ராஜ், பள்ளி இயக்குனர் டினோமெலினாராஜாத்தி, தலைமை ஆசிரியர் சாந்தி, சிலம்பம் பயிற்சியாளர் முனியசாமி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்