தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி

தூத்துக்குடியில் சிலம்பம் போட்டி நடந்தது.;

Update: 2023-01-11 18:45 GMT

தூத்துக்குடி தமிழன் தற்காப்பு சிலம்பம் கலைக்கூடம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள திருக்குறிப்புத் தொண்ட நாயனார் ஆரம்பப்பள்ளியில் நடந்தது. இந்த போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டியை சிறப்பு அழைப்பாளர்களாக ஆசான் எஸ்.பாண்டியன், கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில்தமிழன் தற்காப்பு சிலம்ப கலைக்கூட இணை நிறுவனரும், ஆசானுமான வி.முருகேசன், தலைவர் கே.முருகேசன், நிறுவனரும், செயலாளருமான எம்.மனோ மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்