36 மணி நேரங்களில் முடிந்த புயல் மீட்புப் பணிகள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;

Update:2023-12-16 00:12 IST

சென்னை,

சென்னை எழும்பூரில் உள்ள டான் போஸ்கோ தனியார் பள்ளியின் 10-ம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொரோனா காலத்தில் டான் போஸ்கோ பள்ளிகள்தான் சிகிச்சை மையங்களாக மாறியதாகவும், அதற்கு எப்போதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மேலும் சென்னையில் மிக்ஜம் புயல் மற்றும் வெள்ள மீட்புப் பணிகள் மொத்தமாக 36 மணி நேரங்களில் முடிந்து விட்டதாக குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்