ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது மாண்டஸ் புயல்...!

வட தமிழ்நாட்டில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-12-10 15:40 GMT

சென்னை,

அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. சுமார் 5 மணிநேரத்திற்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையை கடந்த போது சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் 75 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசியது.

மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் பாதிக்கப்பட்டன. சென்னையில் சுமார் 694 மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் மேற்கொண்டனர்.

புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில், மாண்டஸ் புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திலிருந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கும் எனவும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்