மாண்டஸ் புயல்: 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக இன்று 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-12-10 02:45 GMT

சென்னை,

மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மாமல்லபுரம் அருகே நள்ளிரவு 02.30 மணியளவில் கரையை கடந்த 'மாண்டஸ் புயல்' ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்தது. இதன் காரணமாக இன்றும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இந்த நிலையில், தொடர் மழை காரணமாக இன்று 16 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மற்றும் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்