அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி

Update: 2022-09-15 18:45 GMT

வெளிப்பாளையம்

நாகை மாவட்டத்தில் அண்ணா பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10-ம் இடம் வரை பெற்றவர்களுக்கு தலா ரூ.250-க்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். இதில் நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, மாவட்ட விளையாட்டு-இளைஞர் நலன் அலுவலர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்