நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

Update: 2022-09-20 18:45 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தர்மபுரி எம்.எல்.ஏ. எஸ்.பி.வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்ரமணி ஆகியோர் கலந்து கொண்டு 67 மாணவ-மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகளை வழங்கி பேசினர். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் சண்முகம், பா.ம.க. நிர்வாகிகள் பெரியசாமி, சண்முகம், மனோகரன், அன்பு கார்த்திக், ஒன்றிய கவுன்சிலர் முருகன், தி.மு.க. நிர்வாகிகள் பழனிசாமி, நடராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வீரமணி மற்றும் ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்