வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-14 19:15 GMT


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்தவர்கள் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலை வாங்கி தருவதாக

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் திருநகரை சேர்ந்தவர் அனு ராயர் (வயது27). இவரிடம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அபுதாபியில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுரேஷ் மனோகரன் மற்றும் துபாயில் இருக்கும் கேரளாவைச் சேர்ந்த நாச்சி என்ற நசிம் ஆகியோர் கூறினார்களாம். இதை நம்பிய அனுராயர் 14 தவணைகளில் இவர்களுக்கு ரூ.10 லட்சத்தி 14 ஆயிரத்தை அனுப்பினாராம்.

மோசடி

இந்த பணத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவர்கள் வேலை வாங்கி தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனுராயர், இதுகுறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் செய்தார். அவரது உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்