சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மேல்விஷாரம் இஸ்லாமிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா குமார் தலைமையில் மேல்விஷாரம் இஸ்லாமிய அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சைபர் கிரைம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.