தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு
நெல்லை அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு வெட்டு
நெல்லை:
நெல்லை அருகே உள்ளதாழையூத்து பசும்பொன் நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 31). இவர் டயர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 4-ந் தேதி தாழையூத்தைச் சேர்ந்த துரைபாண்டி (25), கார்த்திக் (23) ஆகியோர் மது அருந்தியதாகவும், இதனை பார்த்த சேகர் சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், சேகரை போனில் தொடர்பு கொண்டு நாரணம்மாள்புரம் பழைய பஞ்சாயத்து அலுவலகம் அருகே வருமாறு அழைத்தனர். அங்கு சென்றதும் அவரை அவதூறாக பேசி கத்தியால் வெட்டியதில் சேகருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது சண்டையை தடுக்க வந்த சங்கர் என்பவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சேகர் தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி 2 பேரையும் கைது செய்தார்.