வேலைக்கு அழைத்து செல்லாத வெல்டருக்கு கத்தி வெட்டு

திண்டிவனத்தில் வேலைக்கு அழைத்து செல்லாத வெல்டருக்கு கத்தி வெட்டு தொழிலாளி கைது

Update: 2023-06-27 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம், கிடங்கல்-1, சுந்தர முதலி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 44). வெல்டரான இவர் கிடங்கல்-1 பகுதியில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை திண்டிவனத்தை அடுத்த சிங்கனூர் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி பிரகாஷ்(39) தன்னை ஏன் வேலைக்கு அழைத்து செல்லவில்லை என்று கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோஷ்குமாரின் கண், காது, கழுத்து என பல இடங்களில் ெவட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்