வாலிபருக்கு கத்தி வெட்டு

திண்டிவனம் அருகே வாலிபருக்கு கத்தி வெட்டியது தொடா்பாக அண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-09 18:45 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த கொள்ளார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் பாலாஜி(வயது 25). இவரது அண்ணன் பாஸ்கர். இருவருக்கும் சொத்து சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன வேதனையில் இருந்த பாலாஜி, தனது தந்தையின் புகைப்படத்தை தூக்கி போட்டு உடைத்தார். இதனால் ஆத்திரடைந்த பாஸ்கர் மற்றும் அவரது தரப்பினர் விஜயகுமார், ஜெயக்குமார், ரமேஷ் ஆகியோர் தகாத வார்த்தைகளால் திட்டி பாலாஜியை கத்தியால் தலையில் வெட்டினர். இதில் காயமடைந்த பாலாஜி திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் பாஸ்கர் உள்பட 4 பேர் மீதும் ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தங்களை தாக்கியதாக பாஸ்கரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் பாலாஜி, புவனா(33) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்