வெட்டுக்காட்டுவலசு பகுதியில்மின்சார பெட்டிக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு

வெட்டுக்காட்டுவலசு பகுதியில் மின்சார பெட்டிக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பு பிடிபட்டது

Update: 2023-05-09 21:38 GMT

ஈரோடு வெட்டுக்காட்டுவலசு சுப்பிரமணியன் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் நேற்று தன்னுடைய வீட்டின் மின்சார பெட்டிக்குள் பாம்பு ஒன்று சுருண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் ஈரோடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் மின்சார பெட்டிக்குள் சுருண்டு இருந்த பாம்பை லாவகமாக பிடித்து சாக்குப்பையில் போட்டனர். பிடிபட்டது 2 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் கட்டுவிரியன் பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்