சுங்கச்சாவடி பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டம்

சுங்கச்சாவடி பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-10-13 20:06 GMT

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை சுங்கச்சாவடியில் ஆட்குறைப்பு நடவடிக்கைக்காக 28 பணியாளர்களை பணிநீக்கம் செய்த ஒப்பந்த தனியார் நிறுவனத்தை கண்டித்து, அந்த பணியாளர்களும், சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்களும் கடந்த 1-ந்தேதி முதல் திருமாந்துறை சுங்கச்சாவடி அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் போராட்ட களத்தில் பல்வேறு விதமான போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 13-வது நாளாக சுங்கச்சாவடி பணியாளர்களின் போராட்டம் நீடித்தது. அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்