பல் பிடுங்கிய விவகாரம்: காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட 3 காவல் ஆய்வாளர்களுக்கு மீண்டும் பணி
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக ஏ.எஸ்.பியாக இருந்த பல்வீர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.;
நெல்லை,
நெல்லை அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதிகளின் பற்களை பிடுங்கி அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் சித்ரவதை செய்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பல்வீர் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு சில காவல்துறையினர் காத்திருப்போர் பட்டியலுக்கும் மாற்றப்பட்டு இருந்தனர். பற்களை பிடுங்கிய விவகாரம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட காவல் ஆய்வாளர்கள் 3 பேருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.
*கல்லிடைக் குறிச்சி ஆய்வாளாரக இருந்த ராஜகுமாரி குற்றாலம் காவல் ஆய்வாளாராக பணியிட மாற்றம்
*விக்கிரமசிங்க புரம் காவல் ஆய்வாளராக இருந்த பெருமாள் மணவாளக் குறிச்சி வட்டத்தின் ஆய்வாளராக மாற்றம்
* உளவுப்பிரிவு காவல் ஆய்வாளராக இருந்த கோமதி மார்த்தாண்டம் காவல் ஆய்வாளராக பணியிட மாற்றம்