நெல்வயலில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி-மாணவர்கள் செயல்விளக்கம்

நெல்வயலில் வரப்பு பயிராக உளுந்து சாகுபடி செய்வது குறித்து மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

Update: 2022-12-28 18:45 GMT

கடையநல்லூர்:

கடையநல்லூர் வட்டாரத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் கிராம அளவில் விவசாய அனுபவத்தை பெரும் பொருட்டு முகாமிட்டுள்ளனர். இம்மாணவர்கள் உதவி வேளாண் இயக்குனர் உதயகுமாரின் ஆலோசனையின் பேரில் கிராமங்களில் வெவ்வேறு அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளை சந்தித்து புள்ளி விவரங்களை சேகரித்து மாற்று பண்ணை தயார் செய்து அளித்திடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விவசாயிகளுக்கு பயிர்களின் மகசூலை அதிகரிக்கும் தொழில்நுட்பங்களை செயல்விளக்கமாக செய்து காண்பித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்குடி கிராமத்தில் விவசாயியின் நெல்வயலின் வரப்பில் உளுந்து சாகுபடி செய்யும் முறையை செயல்விளக்கமாக செய்து காண்பித்தனர். இவ்வாறு வரப்பில் உளுந்து சாகுபடி செய்வதால் நெற்பயிரில் பூச்சி தாக்குதல் குறைவது, மண்வளம் அதிகரிப்பது மற்றும் கூடுதல் வருமானம் கிடைப்பது போன்ற பலன்கள் இருப்பதாக மாணவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இச்செயல் விளக்கத்தின் போது வேளாண் உதவி அலுவலர் முருகேசன் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்