கடலூரில் ஒரே நேரத்தில் வெயிலுடன் மழை

கடலூரில் ஒரே நேரத்தில் வெயில் அடித்ததோடு, மழையும் பெய்தது.

Update: 2023-06-26 18:45 GMT

வெயிலும், மழையும்

கடலூர் மாவட்டத்தில் கோடையை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் வெப்பச்சலனம் காரணமாகமழையும் பெய்தது. கடந்த 2 நாட்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. அதாவது 90 டிகிரிக்கும் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று திடீரென வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடலூரில் 98.96 டிகிரி வெயில் பதிவானது. இதை காலை 8 மணிக்கே உணர முடிந்தது. நேரம் செல்ல, செல்ல சூரியன் சுட்டெரித்தது.

இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். இதற்கிடையில் மாலை 4.30 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் மழை பெய்தது. அதேவேளை வெயிலும் அடித்த வண்ணம் இருந்தது. இந்த மழை விட்டு, விட்டு சிறிது நேரம் பெய்தது. அதன்பிறகு வானம் மேக மூட்டமாக மாறியது.

மழைநீர் தேங்கியது

இருப்பினும் இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்திற்கு விளையாட வந்த மாணவர்கள் சிரமப்பட்டனர். சிலர் மழையிலும் விளையாடினர். நடை பயிற்சிக்கு வந்தவர்கள் ஆங்காங்கே மழைக்கு ஒதுக்கி நின்று விட்டு சென்று விட்டனர். சாலையோர வியாபாரிகளும் இந்த திடீர் மழையால் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்ததை பார்க்க முடிந்தது. இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்