கடலூர்- பண்ருட்டி வரை தேசியமத ஒற்றுமை நல்லிணக்க நடைபயணம்

ராகுல்காந்தி இளையோர் பேரவை சார்பில் கடலூர்- பண்ருட்டி வரை தேசியமத ஒற்றுமை நல்லிணக்க நடைபயணம் 30-ந்தேதி நடக்கிறது.

Update: 2023-01-20 18:45 GMT

கடலூர்:

ராகுல்காந்தி இளையோர் பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். வக்கீல் விட்டல், சம்பத்குமார், சுகுதேவ், சுரேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர்கள் இளைஞர் காங்கிரஸ் ஸ்ரீதர், பழனி, மாநில செயலாளர் விக்னேஷ், ஆட்டோ வேலு, மாவட்ட துணை தலைவர் ரஞ்சித், ஊடக பிரிவு தலைவர் புருஷோத்தமன், நிர்வாகிகள் ராமச்சந்திரன், கார்த்திகேயன், ராமர், சலாவுதீன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ராகுல்காந்தி நடைபயணம் நிறைவு நாளான வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) கடலூரில் இருந்து பண்ருட்டி வரை தேசிய, மத ஒற்றுமை நல்லிணக்க நடைபயணத்தை நடத்துவது, அதில் ராகுல்காந்தி இளையோர் பேரவை நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாரிமுத்து நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்