கடலூர் சிறுமியின் தந்தை தொடர்ந்த வழக்கு: டிஜிபிக்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட டிஜிபிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-07-25 13:49 GMT

சென்னை,

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தனது 17 வயது மகள், கடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை என சிறுமியின் தந்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு பதிவு செய்தார்.

மேலும் குற்றவாளியை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெறவில்லை என்றும் மருத்துவ பரிசோதனை நடத்தவில்லை எனவும் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதி சதீஷ்குமார், வழக்கில் போலீசார் போக்சோ சட்டப்படியும், குற்ற விசாரணை முறைச்சட்டப்படியும் செயல்படவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

எனவே, போக்சோ சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும் என அனைத்து போலீசாருக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக டிஜிபி-க்கு, நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சிறுமிகள் சார்பான புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தி இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்