சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் முப்பெரும் விழா
ேசலம் கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் முப்பெரும் விழா நடந்தது.
சேலம் கோட்டை சி.எஸ்.ஐ. லெக்லர் நினைவாலயத்தில் தென்னிந்திய திருச்சபையின் 75-வது ஆண்டு நிறைவு பவள விழா, ஆலய மறுபிரதிஷ்டை விழா மற்றும் ஆலய நிறுவனரும், தொழிற் கல்வியின் தந்தை என போற்றப்படுபவருமான லெக்லரை நினைவு கூறும் விழா என முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆலயத்தில் இருந்து சி.எஸ்.ஐ. பள்ளிக்கு கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர். பின்னர் அங்குள்ள லெக்லரின் மணிமண்டபத்தில் ஆயர் எழில் ராபர்ட் கெவின் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
இதையடுத்து ஆலயத்தில் சிறப்பு திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாங்கரை அக்னி எழுப்புதல் சபை பாஸ்டர் ஜான்சன் கலந்து கொண்டார். ஆராதனை முடிவில் ஆலயத்தின் மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
இதில் ஆலய செயலாளர் இம்மானுவேல் சார்லஸ், பொருளாளர் தேவகுமார், போதக சேகர குழு உறுப்பினர்கள் ஞானதாஸ், ஜெயகுமார், ஜாஸ்வா, பென்னி கமலேஷ், சாமுவேல் ஜெபமணி, உஷா குமார், விமலா அருள் ரூபன், சாந்தி கிறிஸ்டினாள், மோனிகா இசபெல், திருமண்டல உறுப்பினர்கள் செல்லக்குமார், நெல்சன் கொர்நேலியஸ், ஜெயக்கொடி சாந்தகுமார் மற்றும் பெண்கள் ஐக்கிய சங்கத்தினர், வாலிபர் குழுவினர் என திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆலய வளாகத்தில் ஐக்கிய விருந்து நடந்தது.