சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-09-09 16:15 GMT

கன்னியாகுமரியில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சுற்றுலா பயணிகள்

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். மேலும், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். பின்னர், முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி, பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

நீண்ட வரிசையில்...

அதைத்தொடர்ந்து கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை காண படகு துறைக்கு சென்றனர். அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து படகில் உற்சாகத்துடன் சென்று விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்து விட்டு திரும்பினர்.

அதன்பிறகு காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட்,, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா ஆகியவற்றையும் பார்த்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் கடற்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்