ஆயுத பூஜைக்கு அலைமோதிய கூட்டம்: திடீரென தீப்பிடித்து எரிந்த கார் - கோயம்பேடு மார்கெட்டில் பரபரப்பு

சென்னை கோயம்பேடு மார்கெட்டில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-22 17:13 GMT

சென்னை,

ஆயுத பூஜை பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்கெட்டில், இன்று கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் மார்கெட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்தது.

அப்போது, காரின் டயர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இருப்பினும், கார் முழுவதும் கருகி நாசமானது குறிப்பிடத்தக்கது.Full View

Tags:    

மேலும் செய்திகள்