கன்னியாகுமரியில் அலைமோதிய கூட்டம்; 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம் செய்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது.

Update: 2024-10-12 11:39 GMT

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக படகு சவாரி செய்ய, சுற்றுலா பயணிகள் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து படகு பயணம் செய்த சுற்றுலா பயணிகள், முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளிட்ட இடங்களை கண்டு களித்தனர். 

Full View


Tags:    

மேலும் செய்திகள்