மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம்

சிவகங்கை, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-11 18:45 GMT


சிவகங்கை, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழு தலைவரும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தலைமையில், மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், உதய் திட்டம், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா, சமக்ர சிக்ஷா, தேசிய சமூக உதவித்திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வேலை வாய்ப்புத்திட்டம், தீன்தயாள் உபாத்தியாய்- அந்தியோதயா யோஜனா, சத்துணவு திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கிராம, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம்-கிராமம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மத்திய, மாநில அரசின் துறைகள் ரீதியாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. ஆய்வு செய்தார். கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குர் சிவராமன் மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்