பயிறு வகை சாகுபடி சிறப்பு முகாம்

வெள்ளம்பி கிராமத்தில் பயிறு வகை சாகுபடி சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-01-07 17:37 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வெள்ளம்பி கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் நெல்லுக்கு பின் பயறு வகை சாகுபடி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வேளாண்மை இணை இயக்குனர் வடமலை தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் ராமன் முன்னிலை வகுத்தார். வேளாண்மை உதவி அலுவலர் திலகவதி வரவேற்றார்.

திமிரி ஒன்றியக்குழு தலைவர் அசோக் கலந்துகொண்டு நெல் விதைப்பு கருவி, உளுந்து, யூரியா ஆகியவற்றை 50 சதவீத மானியத்தில் வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், ஆத்மா திட்ட அலுவலர் தாமோதரன், கோபாலகிருஷ்ணன், ராஜேஷ், கிராம நிர்வாக அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்