அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம்?

அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Update: 2023-01-04 19:03 GMT

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே வடகரை உள்ளது. கரூர் -திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அருகே அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் திருப்பூர் மாவட்டத்தை கடந்து வடகரை என்னுமிடத்தில் கரூர் மாவட்ட எல்லைக்குள் வந்து திருமக்கூடலூர் என்னுமிடத்தில் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதமாக ஆற்றில் தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் வடகரை பகுதியில் நேற்று காலை 11.45 மணியளவில் அமராவதி ஆற்றில் முதலை ஒன்று தென்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சிலர் அதனை படம்பிடித்து வாட்ஸ் அப்பில் பரப்பி விட்டனர். இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், அமராவதி ஆற்றின் அருகில் இறங்கவோ, குளிக்கவோ பொதுமக்கள் செல்ல வேண்டாம், முதலை உலாவுகிறது என தவறாக பரப்பி விட்டிருந்தால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்