அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் அமைதி நிலவ பிரார்த்தனை நடைபெற்றது.

Update: 2023-08-07 17:22 GMT

திருப்பூரில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மணிப்பூரில் அமைதி நிலவ பிரார்த்தனை நடைபெற்றது.

கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்தும், அங்கு மனிதநேயமற்ற இனஅழிப்பை கண்டித்தும் திருப்பூரில் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் மனிதநேய மக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பூர் குமரன் ரோடு புனித கத்தரீனம்மாள் ஆலய பங்குதந்தை அருள் செபமாலைராஜ் தலைமை தாங்கினார். இடுவம்பாளையம் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை புஷ்பநாதன் வரவேற்றார். குமார்நகர் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை பிலிப், நல்லூர் நற்கருணை நாதர் ஆலய பங்குதந்தை சுந்தரம், சபாபதிபுரம் டி.இ.எல்.சி. அருள்நாதர் ஆலய ஆயர் அசோக்குமார், தேசிய சிறுபான்மை மக்கள் இயக்கம் மாநில பொதுச்செயலாளர் விக்டர் ராமசாமி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் அபுசாலிக், திருப்பூர் நியூ ஜெனரேசன் போதகர் கூட்டமைப்பின் தலைவர் ஏனோக்கு உள்பட பல்வேறு கிறிஸ்தவ, இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

சிறப்பு பிரார்த்தனை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், கோஷம் எழுப்பியபடியும் பங்கேற்றனர். பின்னர் மணிப்பூர் கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும், அங்கு அமைதியான சூழல் ஏற்படவும் வேண்டி அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இதில் புனித கத்தரீனம்மாள் ஆலயத்தின் துணைத்தலைவர் டோனி, செயலாளர் வினோத், பொருளாளர் பீட்டர், பங்கு பேரவை நிர்வாகிகள் ஆல்பர்ட், விக்டர், குணசீலன், குமார்நகர் பங்கு நிர்வாகி பாபு இருதயராஜ், இடுவம்பாளையம் பங்கு நிர்வாகி குரூஸ், நல்லூர் பங்கு அருட்கன்னியர்கள், இளையோர் ஜான் பீட்டர்சன் உள்பட அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள், முஸ்லிம் மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்