பெரம்பலூர் மாவட்ட குற்ற கலந்தாய்வு கூட்டம், மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. கார்த்திகேயன் தலைமை தாங்கி போலீசாரிடையே பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளில் எவ்வாறு விசாரணையை முடித்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றும், பொதுமக்களிடம் அணுகும்போது மிகவும் தன்மையாக நடந்து கொள்ள வேண்டும், என்றும் கூறினார். கூட்டத்தில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.