'கிரிக்கெட் வீரர் டோனி எங்களை பார்க்க வருகிறார்' - பொம்மன்-பெள்ளி தம்பதி தகவல்
பழனியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பொம்மன்-பெள்ளி தம்பதி கலந்துகொண்டனர்;
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்த பள்ளி மாணவர்களுக்கான கலைநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஆஸ்கார் விருது பெற்ற 'தி எலிபென்ட் விஸ்பரஸ்' ஆவண படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதி கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். விழாவில் அவர்கள் பேசும்போது, ஆஸ்கார் விருதுக்கு பிறகு முக்கிய தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் எங்களை பாராட்டியது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் கிரிக்கெட் வீரர் டோனியும் எங்களை பார்க்க வருகிறார் என்றனர். நிகழ்ச்சி முடிவில் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் அவர்களுடன் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.