கிரிக்கெட் வீரர் தோனி பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடும் ரசிகர்

கடலூர் அருகே கிரிக்கெட் வீரர் தோனியின் பிறந்தநாளை அவரது தீவிர ரசிகர் வித்தியாசமாக கொண்டாட உள்ளார்.

Update: 2022-07-06 12:22 GMT

கடலூர்:

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் கோபி கிருஷ்ணன் (வயது 31). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். ‌ கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஆவர்.

இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தோனி மீது உள்ள தீவிர பற்றால் தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் கலரில் மஞ்சல் கலரில் பெயிண்ட் அடித்து வீட்டில் ஒரு பகுதியில் தோனி படம் வரைந்து அசத்தினார். இதனால் உலக அளவில் உள்ள டோனி ரசிகர்கள் கோபியை போன் மூலமும், சமூக வலைத்தளங்களில் வழியாக பாராட்டினார். தோனியே தனது டிவிட்டர் பக்கத்தில் கோபிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று கோபி மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டினார்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது, ஆனாலும் மனம் தளராமல் தோனி மீது கொண்ட நீங்கா பற்றால் தற்போது 07-07-2022 தேதி தோனி 41வது பிறந்த நாளை முன்னிட்டு, கோபி தனது வீட்டை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலரில் மாற்றியதோடு மட்டும் அல்லாமல், தனது வீட்டில் ஹேப்பி பர்த்டே தோனி என்ற வாசகம் எழுதி, தனது வீடு முழுவதும் தோனி படத்தை வரைந்து கொண்டு இருக்கின்றார்.

இவர் தனது இரண்டு சக்கர வாகனம் மஞ்சள் கலரில் வாங்கி, அதற்கு டோனியின் ஜெர்சில் உள்ள 7 என்ற எண்ணை தனது வண்டியின் நம்பர் பிளேட்டில் 777 வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்