தவசு முத்து நாடார் பள்ளியில் கிரிக்கெட் போட்டி
பொறையாறு தவசு முத்து நாடார் பள்ளியில் கிரிக்கெட் போட்டி;
பொறையாறு:
பொறையாறு தவசு முத்து நாடார் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 40 அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். நேற்று காலை நடந்த இறுதி போட்டியில் வெற்றி பெற்ற பொறையாறு வாரியார்ஸ் அணிக்கு ரூ.15 ஆயிரம் மற்றும் சூழல் கோப்பையை தனது சொந்த செலவில் பொறையாறு நாடார் எஸ்டேட்டை சேர்ந்த விஜயாலயன் ஜெயக்குமார் வழங்கி கிரிக்கெட் அணி வீரர்களை பாராட்டி பேசினார்.
தொடர்ந்து 2-ம் இடம் பெற்ற செம்பனார்கோவில் அணிக்கு ரூ.12 ஆயிரமும், 3-ம் இடம் பெற்ற முல்லை அணிக்கு ரூ.8 ஆயிரமும், 4-ம் இடம் பெற்ற எச்.பி.சி.சி. காரைக்கால் அணிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசு வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஏராளமான விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.