அரியலூரில் நாளை கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி அரியலூரில் நாளை நடக்கிறது.

Update: 2023-02-18 18:30 GMT

அரியலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள் தனித்தனியாக நாளையும் (திங்கட்கிழமை), பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் வருகிற 24-ந்தேதி கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. இதே போன்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகள் தனித்தனியாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கான இறகுப்பந்து, கபடி, எறி பந்து தழுவிய வாலிபால் போட்டி ஆகிய விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அரியலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்