சென்னம்பட்டியில் கிரிக்கெட் போட்டி

Update: 2023-05-27 18:45 GMT

காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அடிலம் பஞ்சாயத்து சென்னம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளை முன்னாள் அமைச்சரும், தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.பழனியப்பன் தொடங்கி வைத்தார். கிழக்கு ஒன்றிய செயலாளர் அடிலம் அன்பழகன் வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர் வக்கீல் ஆ.மணி, ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், வக்கீல் எம்.வி.டி.கோபால், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மாரியப்பன், இளைஞரணி மகேஷ் குமார், ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், மாவட்ட மகளிர் தொண்டரணிஅமைப்பாளர் ஜெயா, நிர்வாகிகள் செந்தில்குமார், அய்யப்பன், நகர இளைஞரணி நிர்வாகி அருள், கிரிக்கெட் போட்டி அமைப்பாளர் ஹரிகரன், தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் ஆதம், மவுலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்