மன்னார்புரத்தில் கிரிக்கெட் போட்டி

பொங்கல் விழாவையொட்டி மன்னார்புரத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2023-01-16 21:53 GMT

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் மன்னார்புரத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு புனித ஜெபமாலை அன்னை கிரிக்கெட் அணியினர் நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் திசையன்விளை அணி வென்று முதல் பரிசு பெற்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மன்னார்புரம் பங்குத்தந்தை எட்வர்ட் அடிகளார், சங்கனாங்குளம் பஞ்சாயத்து தலைவர் எஸ்.சின்னத்தம்பி, நாங்குநேரி ஒன்றிய கவுன்சிலர் மை.ரா.அகஸ்டின் கீதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். போட்டி ஏற்பாடுகளை மன்னார்புரம் இளைஞர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்