வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
உள்ளுகுறுக்கையில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் ஒன்றியம் திம்ஜேப்பள்ளி ஊராட்சி உள்ளுகுறுக்கையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சேலம், பெங்களூரு உள்பட 50 அணிகள் கலந்து கொண்டன. 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் நொகனூர் அணிக்கு முதல் பரிசு மற்றும் கோப்பையை ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரி முத்தன் வழங்கினார். 2-ம் பரிசை உள்ளு குறுக்கை அணிக்கு தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்தி வழங்கினார். 3-ம் பரிசு எக்காண்டஅள்ளி அணிக்கும், 4-ம்பரிசு கெலமங்கலம் அணிக்கும், 5-ம் பரிசு ராயக்கோட்டை அணிக்கும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளைஉள்ளுகுறுக்கை கிரிக்கெட் அணியினர் செய்திருந்தனர்.